சீயமங்கலம் குடவரை கோயில்..! Seeyamangalam Cave Temple in Tamil..!

சீயமங்கலம் குடவரை கோயில்..! சீயமங்கலம் குகைக் கோயில் தமிழில்..! மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய ஏழாம் நூற்றாண்டு குடவரை கோயில்...! இந்திய குகைக் கோயில்கள், அமைவிடம் : ★ சீயமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலூக்காவில் அமைந்துள்ள தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ளனர். இந்த ஊரின் மக்கள் தொகை, 2011 கணக்குப்படி 1665 ஆகும் ★ சீயமங்கலம், வந்தவாசிக்கு தென்மேற்காக 25 கி.மீ. தொலைவிலும், சேத்துப்பட்டிற்கு தென்கிழக்காக 21 கி.மீ. தொலைவிலும், மாவட்ட தலைநகர் திருவண்ணா மலைக்கு வடகிழக்காக 63 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. பெயர் காரணம்: ★ இந்த கிராமத்தின் பெயர் குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் தந்தை சிம்மவிஷ்ணுவின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ★ முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போக்குவரத்து: வந்தவாசியிலிருந்து, செஞ்சி செல்லும...