இந்தியக் குடைவரைக் கோயில்கள்...! Indian Cave Temples in Tamil..!
இந்தியக் குடைவரைக் கோயில்கள்...!
Indian Cave Temples in Tamil..!
குடைவரைக் கோயில் கள் என்றால் என்ன?
What are Cave Temples?
பெரிய மலை(வரை)களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் "குடைவரைக் கோயில்கள்" என அழைக்கப்படுகின்றன.
கி.மு15.ஆம் நூற்றாண்டுக்கு பின் இருந்த கட்டிட முறை எது?
இந்தியாவில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது.
கி.மு. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரிய மலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.
தமிழக குடைவரைக் கோவில்கள்..!
தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்கள்..!
★ தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை.
◆ பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும் மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர்.
பாண்டியர் குடைவரைக் கோவில்கள்..!
பாண்டியப் பேரரசின் குடைவரைக் கோவில்கள்..!
★ பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான்.
★ தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.
பல்லவர் கால குடைவரைக் கோவில்கள்..!
★ மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில்
★ பல்லாவரம் குடைவரை
★ மாமண்டூர் உருத்திரவாலீஸ்வரம்
★ மாமண்டூர் திருமால் குடைவரை
★ குரங்கணில்முட்டம் குடைவரை
★ வல்லம் வசந்தீஸ்வரம் (செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள்)
★ மகேந்திரவாடி குடைவரை
★ தளவானூர் குடைவரைக் கோயில்
★ திருச்சிராப்பள்ளி குடைவரை
★ நாமக்கல் நரசிம்மர்
★ திருக்கோயில்
★ நார்த்தாமலை குடைவரை
★ குடுமியான்மலை குடைவரை
★ திருமெய்யம் குடைவரை
★ சீயமங்கலம் குடைவரைக் கோயில்
★ விளாப்பாக்கம் குடைவரை
★ மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம்
★ மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம்
★ மாமல்லபுரம் கோனேரி மண்டபம்
★ மாமல்லபுரம் வராக மண்டபம்
★ மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
★ மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம்
★ மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை
★ மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்
★ மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம்
★ மாமல்லபுரம் பரமேஸ்வர மகாவராக விஷ்ணுகிருகம்
★ மாமல்லபுரம் இராமானுச மண்டபம்
★ மாமல்லபுரம் சிறிய யாளி மண்டபம்
★ சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்
★ சாளுவன்குப்பம் புலிக்குடைவரை
★ அரகண்டநல்லூர்க் குடைவரை
★ திருக்கழுங்குன்றம் குடைவரை
★ சிங்கப்பெருமாள்கோயில் குடைவரை
★ சிங்கவரம் குடைவரை
★ மேலச்சேரிக் குடைவரை
★ கீழ்மாவிலங்கைக் குடைவரை
★ ஆவூர்க் குடைவரை
★ திரைக்கோயில் குடைவரை
★ புதூர்க் குடைவரை
பாண்டியர் குடைவரைக் கோவில்கள்..!
முதலாம் பாண்டியப் பேரரசு கட்டிடக் கலை..!
★ கழுகுமலை வெட்டுவான் கோயில்
★ பிள்ளையார்பட்டிக் குடைவரை
★ மலையடிக்குறிச்சிக் குடைவரை
★ மகிபாலன்பட்டிக் குடைவரை
★ அரளிப்பாறைக் குடைவரை
★ திருமெய்யம் குடைவரைகள்
★ திருத்தங்கல் குடைவரை
★ செவல்பட்டிக் குடைவரை
★ திருமலை கோயில் குடைவரை
★ திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
★ மணப்பாடுக் குடைவரை
★ மூவரை வென்றான் குடைவரை
★ சித்தன்னவாசல் குடைவரை
★ ஐவர் மலைக் குடைவரை
★ அழகர் கோவில் குடைவரை
★ ஆனையூர்க் குடைவரை
★ வீரசிகாமணிக் குடைவரை
★ திருமலைப்புரம் குடைவரை
★ அலங்காரப்பேரிக் குடைவரை
★ குறட்டியாறைக் குடைவரை
★ சிவபுரிக் குடைவரை
★ குன்றக்குடிக் குடைவரைகள்
★ பிரான்மலைக் குடைவரை
★ திருக்கோளக்குடிக் குடைவரை
★ அரளிப்பட்டிக் குடைவரை
★ அரிட்டாபட்டிக் குடைவரை
★ மாங்குளம் குடைவரை
★ குன்றத்தூர் குடைவரை
★ கந்தன் குடைவரை
★ யானைமலை நரசிங்கர் குடைவரை
★ தென்பரங்குன்றம் குடைவரை
★ பசுபதேசுவரர் குடைவரைக் கோயில்
★ வடபரங்குன்றம் குடைவரை
★ சிதறால் மலைக் கோவில்
முத்தரையர் குடைவரைக் கோவில்கள்..!
★ மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்
கர்நாடகா குடைவரைக் கோவில்கள்..!
★ பாதாமி குடைவரைக் கோவில்கள்
★ அய்கொளெ
மகாராட்டிர மாநில குடைவரைக் கோவில்கள்..!
★ எல்லோரா – சமணம், பௌத்தம், இந்து
★ அஜந்தா குகைகள் – பௌத்தம்
★ அவுரங்காபாத் குகைகள் – பௌத்தம்
★ பாஜா குகைகள் – பௌத்தம்
★ கான்கேரி குகைகள் – பௌத்தம்
★ கைலாசநாதர் கோவில் –
★ கர்லா குகைகள் – பௌத்தம்
★ மகாகாளி குகைகள் – பௌத்தம்
★ லெண்யாத்திரி – பௌத்தம்
★ மகாகாளி குகைகள் – பௌத்தம்
★ பாண்டவர் குகைகள் – பௌத்தம்
★ ஜோகேஸ்வரி குகைகள்
★ மன்மோடி குகைகள் - பௌத்தம்
★ பேட்சே குகைகள்
★ கொண்டன குகைகள்
★ தானாலே குகைகள்
★ பிதல்கோரா குகைகள்
★ பேட்சே குகைகள்
★ துளஜா குகைகள்
மத்தியப் பிரதேச மாநில குடைவரைக் கோவில் கள்..!
★ தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்
★ பாக் குகைகள்
★ உதயகிரி குகைகள்
★ தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்
★ தம்நார் குகைகள்
ஒடிசா மாநில குடைவரைக் கோவில்கள்..!
★ இரத்தினகிரி
★ லலித்கிரி
★ தௌலி
★ உதயகிரி, கந்தகிரி குகைகள்
★ புஷ்பகிரி
குஜராத் மாநில குடைவரைக் கோவில்கள்..!
★ சியோத் குகைகள்
★ காம்பாலித குகைகள்
★ ஜுனாகத் குடைவரைகள்
ஆந்திரப் பிரதேச மாநில குடைவரைக் கோவில்கள்..!
★ அமராவதி
★ பெலும் குகை
★ போஜ்ஜன்ன கொண்டா
★ உண்டவல்லி
★ குண்டுபள்ளி
★ கோட்டூரு தனதிப்பலு
★ சந்திராவரம்
★ சாலிகுண்டம்
★ தொட்டலகொண்டா
★ நாகார்ஜுனகொண்டா
★ பவிகொண்டா
★ புத்தம்
★ பெத்தபுரம்
★ ராமதீர்த்தம்
★ கண்டசாலா
★ அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்
பிகார் மாநில குடைவரைக் கோவில்கள்..!
★ பராபர் குகைகள்
ஜம்மு காஷ்மீர் மாநில குடைவரைக் கோவில்கள்..!
★ அமர்நாத்
★ வைஷ்ணவ தேவி
★ சிவகோரி
Comments
Post a Comment