இந்தியக் குடைவரைக் கோயில்கள்...! Indian Cave Temples in Tamil..!
இந்தியக் குடைவரைக் கோயில்கள்...! Indian Cave Temples in Tamil..! குடைவரைக் கோயில் கள் என்றால் என்ன? What are Cave Temples? பெரிய மலை(வரை)களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் "குடைவரைக் கோயில்கள்" என அழைக்கப்படுகின்றன. கி.மு15.ஆம் நூற்றாண்டுக்கு பின் இருந்த கட்டிட முறை எது? இந்தியாவில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி.மு. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரிய மலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள். தமிழக குடைவரைக் கோவில்கள்..! தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்கள்..! ★ தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. ◆ பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழ...